பெரியபாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் இரு கிராமத்தினரிடையே நிகழ்ந்த மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அருகே உள்ள வெள்ளியூர், புன்னம்பாக்கம் ஆகிய இரு கிராமத்தினரிடையே செவ் வாய்க்கிழமை தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு பகுதியில் மோதல் வெடித்தது. இதன் எதிரொலி யாக பூச்சி அத்திபேடு பகுதி யிலும் மோதல் மூண்டது. இந்த தாக்குதல் சம்பவங்களில், பத்துக் கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில், பூச்சி அத்திபேடு பகுதி யில் நிகழ்ந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிலர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த நிசாந்த்(19), நாகராஜ்(19), கோடுவெள்ளியை அடுத்த தர்சு கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல்(31), ஆனந்த்(28), விஜி(29), கோபி(34), தயாளன்(37), ஆனந்தன்(36), பிரபு(23), புன்னம்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகம்(22) மற்றும் அகரம் கண்டிகையைச் சேர்ந்த வடி வேல்(32) ஆகிய 11 பேரை வெங்கல் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இதற்கிடையே, ஆரிக்கம்பேடு கிராமத்தினைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்டோர், தங்கள் கிராமத்தினைச் சேர்ந்த ஏழுமலை, வேலு உள்ளிட்டவர்கள் தாக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூச்சி அத்திபேடு பகுதியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக, பூச்சி அத்திபேடு பகுதி யில் 2-வது நாளாக 70-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டுள்ளன.
தாமரைப்பாக்கம், வெள்ளியூர், புன்னம்பாக்கம், பூச்சி அத்திபேடு, தர்சு, லெட்சுமிநாதபுரம், ஆரிக்கம் பேடு, அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், அப்பகுதிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.