பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அழைப்பு விடுத்த சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன் பொதுப்பணித் துறைச் செயலாளர் டி.ஜகந்நாதன். 
தமிழகம்

கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா: ஆளுநர் பங்கேற்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான வரும் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. அதனை அடுத்து ஜூன் 5-ம் தேதி கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவும் நடைபெறவுள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லிக்கு சென்று அழைப்பு விடுத்தார். குடியரசுத் தலைவரும் விழாவில் பங்கேற்க வருவதாக ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையே, பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்க வருமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அழைப்பு விடுத்ததோடு.

நினைவுப் பரிசாகத் தனது புத்தகத்தையும் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆளுநரிடம் வழங்கினார். இந்த சந்திப்பின்போது பொதுப்பணித் துறைச் செயலாளர் டி.ஜகந்நாதன் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT