புதுச்சேரி: இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன் மகன் பாவலர் சிவா (60) புதுச்சேரியில் நேற்று காலமானார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன். அவரது மகன் பாவலர் சிவா (60). கிதார் இசைக் கலைஞரான இவர், திரைப்படங்களில் இளையராஜாவின் இசைக் குழுவில் பணியாற்றியுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டைப் பகுதியில் வசித்து வந்த சிவாவுக்கு மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் நேற்று வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று காலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.