தமிழகம்

பழனிசாமியின் தஞ்சாவூர் பயணம் தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தஞ்சாவூரில் நாளை நடப்பதாக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் நிகழ்ச்சிகள், மே 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மே 4-ம் தேதி (நாளை) தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகள் மற்றும் கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கில் முன்னாள் அமைச்சர் இரா.துரைகண்ணுவின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்தது.

தஞ்சாவூரில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், அந்த நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டு, மே 15-ம் தேதி திங்கள்கிழமை நடைபெறும். அதில் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

SCROLL FOR NEXT