தமிழகம்

புத்தக விழாவில் அதிசயிக்க வைத்த இருவர்

அ.அருள்தாசன்

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும், ‘நெல்லை புத்தக திருவிழா’ கண்காட்சிக்கு வரும் வாசிப்பாளர்களில் அதிசயிக்க வைக்கும் ஆளுமையுடன் பலர் உள்ளனர். அவர்களில் இருவர் மலைக்க வைக்கிறார்கள்.

பாளையங்கோட்டை, சாந்திநகரை சேர்ந்தவர் ராபர்ட் எம்.மைக்கேல் (78). கண்காட்சிக்கு தொடர்ந்து 3 நாட் களாக வந்திருந்தார். முதுகு கூனிட்டு, தள்ளாத வயதிலும் புத்தகங் களை ஆர்வமாக தேர்வு செய்துகொண்டி ருந்த அவரை வெள்ளிக்கிழமை சந்தித்தோம்.

ஆங்கிலம் மீது காதல்

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர். பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவரது வீட்டில் உள்ள நூலகத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அழகு சேர்க்கின்றன. அவற்றில் 90 சதவீதம் ஆங்கிலப் புத்தகங்கள்.

திருநெல்வேலியில் கடந்த 2 ஆண்டாக நடைபெறும் புத்தக திருவிழாவுக்கு வந்து ஆயிரக்கண க்கில் பணம் செலவிட்டு, புத்தகங் களை வாங்கி வருகிறார். இம்முறை ரூ. 6 ஆயிரத்துக்கு புத்தகங்களை வாங்கியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் புலமை பெற இளைஞர்களுக்கு உங்களது ஆலோசனைகள் என்ன? என்று கேட்டபோது, “ஆங்கில புத்தகங்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும். பள்ளிப் பருவத்தி லேயே ஆங்கில இலக்கணத்தை முழுமையாகவும், சரியாகவும் புரிந்து கற்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். அவ்வாறு பேசினால் தவறு வந்துவிடுமோ என்று பயந்து ஒதுங்கிவிடக்கூடாது. ஆங்கிலத்தில் எழுதிப் பழகுவதும் முக்கியம்” என்றார்.

மாற்றுத்திறனாளி

தமிழகத்தில் முதல்முறையாக பார்வையற்றவர்கள் படிக்க, ‘பிரெய்லி’ முறையில் தயாரி க்கப்பட்ட புத்தகங்கள் இக்கண் காட்சியில் இடம்பெற்றுள்ளன. ‘பிரெய்லி’ முறையில் தயாரிக்க ப்பட்ட, ‘அக்னி சிறகுகள்’ புத்த கத்தை தடவிதடவி படித்துக் கொண்டிருந்த பார்வையற்ற நபர் ஆ.பெரியதுரை (40) பார்வையா ளர்களை ஆச்சர்யப்படுத்தினார்.

சேரன்மகாதேவியைச் சேர்ந்த இவர், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். விரைவில் அவருக்கு முனைவர் பட்டம் கிடைக்கவுள்ளது.

இவர் சமூகவியல், நாட்டுப்புற வியல், மனோதத்துவம் ஆகிய 3 பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். மாற்றுத்திறனா ளிகள் உரிமை மற்றும் மறுவாழ்வு அமைப்பின் தலைவராக உள்ளார். மாற்றுத்திறனாளிகள் சிலருக்கு புகலிடம் அளித்து வருகிறார். அரசிடம் அவர் வைத்த கோரிக்கை இதுதான்:

‘கல்வி, வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 8 மாதங்களாகிறது. இதுவரை எந்த மாநில அரசும் அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கவில்லை.

மாற்றுத்திறனாளிகள் செய்யும் வேலைகளை கண்டறிந்து அவர்களுக்கு உரிய வேலையை அரசுகள் அளிக்காததுதான் வேதனையாக இருக்கிறது என்றார் அவர்.

SCROLL FOR NEXT