வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் கணினி பயிற்சி மையத்தை நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்ட விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம். அருகில், சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன், மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர். 
தமிழகம்

வேலூர் | சிறையில் கணினி பயிற்சி மையம்

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் சீர்திருத்த நடவடிக் கையாக அனைத்து மத்திய சிறைகளிலும் கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும் என சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் தெரிவித்திருந்தார். அதன்படி, வேலூர் ஆண்கள் மத்திய சிறையுடன் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து இல்லவாசிகளுக்கான கணினி பயிற்சி மையம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று கணினி பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அப்போது, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன், வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இங்கு தினசரி 30 பேர் வீதம் பயிற்சி பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு்ள்ளன. முதற் கட்டமாக சிறைவாசிகளுக்கு எம்.எஸ் ஆபீஸ் பயிற்சி அளிக்கப் படவுள்ளது.

SCROLL FOR NEXT