தமிழகம்

ராயப்பேட்டையில் அடுக்குமாடி வளாகத்தில் தீ விபத்து

செய்திப்பிரிவு

சென்னை ராயப்பேட்டை அடுக்குமாடி வளாகத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் தனியாருக்கு சொந்தமான 4 மாடி வளாகம் உள்ளது. இதில்வணிக வளாகம், ரப்பர் கிடங்குஉள்ளிட்ட சில நிறுவனங்களும், தனியார் தொலைக்காட்சி அலுவலகமும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் நேற்று இக்கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்த ஜெனரேட்டர் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து கட்டிடத்தின் உள்ளே பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். தகவல் கிடைத்து வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் மொட்டைமாடியில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT