தமிழகம்

எம்எஸ்எம்இ மேம்பாட்டு மையம் நடத்தும் லாஜிஸ்டிக்ஸ் பயிற்சி வகுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என்ற சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

சென்னை, கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் என்ற சான்றிதழ் பயிற்சி வகுப்பை நடத்துகிறது. மே 13, 14, 20, 21, 27 மற்றும் 28-ம்தேதிகளில் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.

வாடிக்கையாளர்களை எவ்வாறு அணுகுவது, நிறுவனத்தின் குறிக்கோள்களை அடைவது எப்படி, மேலாண்மை தத்துவங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள், டிமாண்ட் மற்றும் சப்ளையை எவ்வாறு சமன்படுத்துவது, மூலதனத்தைப் பெருக்குவது, சப்ளை செயினில் தற்போது நிலவும் விஷயங்கள், லாஜிஸ்டிக் மற்றும் சப்ளை செயின் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இப்பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும்.

பொறியாளர்கள், வியாபார முதலாளிகள், உற்பத்தி தொழிற்சாலை நிபுணர்கள், திட்ட மேலாளர்கள், போக்குவரத்து நிபுணர்கள், பட்டதாரிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

பயிற்சிக் கட்டணம் ரூ.6 ஆயிரம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 95000 34831, 96772 90237, 82201 03222 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT