புதுக்கோட்டை: தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி ஆறு வாரங் களுக்குள் தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படும்.
சரியான பாதுகாப்போடுதான் சிறையில் சிறுவர்கள், கைதிகள் தங்க வைக்கப்படுகிறார்கள். எனினும் சில சமயங்களில் தப்பித்து விடுகிறார்கள். அவர்கள் எவ்வாறு தப்பிக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.