தமிழகம்

15 ஆயிரம் டன் கோதுமை கொள்முதல் செய்ய திட்டம் - மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கோதுமை தட்டுப்பாட்டைப் போக்க, வரும் ஆண்டுகளில் 15 ஆயிரம் டன் கோதுமையை தமிழக அரசே கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறினார்.

இதுதொடர்பாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 30 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் இருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க, 9 ஆயிரம் கிலோ லிட்டர் தேவைப்படுகிறது.

மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைப்பு காரணமாக ஏழை மக்கள், குறிப்பாக மலைப் பகுதியில் வாழ்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2007-ல் துவரம்பருப்பு, உளுந்து, பாமாயில், மைதா, ரவை ஆகியவற்றை சந்தையில் விலைக்கு வாங்கி, மானிய விலையில் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் உளுந்து, கோதுமை மாவு அளவைக் குறைத்து விட்டனர். ஆனால், தற்போது பொருளாதார நெருக்கடி, நிதிச்சுமைக்கு இடையேயும் பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை வழங்கி வருகிறோம்.

மாநில அரசு கட்டுப்பாட்டில் மண்ணெண்ணெய் இருந்தால் வெளிச்சந்தையில் வாங்கித் தரலாம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். அதேபோல, 2020-ல் மாதந்தோறும் 13,885 டன் கோதுமை ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு ஜூன் முதல் 8,532 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.

அரிசிக்குப் பதில் கோதுமை தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்கின்றனர். தற்போது மாதம் 15 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு கடிதம்எழுதியுள்ளோம். மண்ணெண் ணெய் குறைப்பு குறித்து மத்திய அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT