சென்னை: பள்ளி மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால் நாளைமுதல் மின்தடையுடன் கூடிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுத்தேர்வு நடைபெறும் காலங்களில் தடையற்ற வகையில் மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும், பராமரிப்புப் பணிக்காக மின் விநியோகத்தை தடை செய்யக் கூடாது எனவும் துறைசார்ந்த அலுவலர்களை மின்வாரியம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இன்றுடன் (ஏப்.28) பொதுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் முடிவடையவுள்ளன. இதனால் நாளை (ஏப்.29) முதல் மின்தடையுடன் கூடிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரியம் முடிவுசெய்துள்ளது.
அதன்படி, சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: தாம்பரம்: கடப்பேரி - சிட்லபாக்கம் 1-வது பிரதான சாலை, ராமசந்திரா சாலை, பத்மநாப தெரு, கண்ணதாசன் தெரு, சீனிவாசா நகர், எம்ஐடி.
கிண்டி: ராமாபுரம் ஐபிசி காலனி, மணப்பாக்கம், கொளப்பாக்கம், பூத்தபேடு, நெசப்பாக்கம், எம்ஜிஆர்நகர், கேகே பொன்னுரங்கன் சாலை (வளசரவாக்கம்) நங்கநல்லூர் பிவிநகர் (10 முதல் 19-வது தெரு),நேரு காலனி, என்ஜிஓ காலனி, மூவரசன்பேட்டை - எம்எம்டிசி காலனிபிரதான சாலை, சுப்ரிமணியன் நகர்,சபாபதி நகர், பள்ளிக்கரணை -மடிப்பாக்கம், எல்ஐசி நகர் முழுவதும், ஸ்ரீ நகர், டிஜிநகர்-புழுதிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, புழுதிவாக்கம் ஊராட்சி மன்றஅலுவலகம், 25,26,27,28 தில்லைகங்கா தெரு, 3-வது பிரதானசாலை நங்கநல்லூர், வாணுவம்பேட்டை - ஆண்டாள் நகர் 1-வது பிரதான சாலை, நேதாஜி காலனி, ஆண்டாள்நகர், ஆலந்தூர் ஆதம்பாக்கம் - ஏரிக்கரைத் தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11-வது தெரு.
வியாசர்பாடி: மாத்தூர் - மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், அசிசி நகர் அனைத்து தெருக்கள், செட்டிமேடு, சீனிவாச மார்டன் டவுன், எம்எம்டிஏ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை.