திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி படிவத்தில் உள்ள ஜெயலலிதா கைரேகை உண்மையா என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் வில்பர்ட் அக்டோபர் 6ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும்த ஞ்சாவூர் தொகுதி இடைதேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் 'பார்ம் பி' படிவத்தில், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் வேட்பாளர்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.
தேர்தல் நடந்த நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர் போஸை அங்கீகரித்து வேட்புமனுவின் படிவம் ஏ, பி ஆகியவற்றில் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுசெய்து, அதை சென்னை அரசு பொது மருத்துவமனை பேராசிரியர் பாலாஜி சான்றளித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையில் அதிமுக வேட்பாளர் போஸ் வேட்புமனுவில்மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட 20 ஆவணங்களுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி ஆகஸ்ட் 24-ம் தேதியன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிவிளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் போஸின் வெற்றிக்கு எதிரான வழக்கில்,தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கடந்த ஆகஸ்ட் 24 அன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் தேர்தல் வழக்கில் ஜெயலலிதா கைரேகையிட்ட ஏ, பி படிவங்கள் மிக முக்கியமானது என்பதால், இதுதொடர்பான ஆவணங்களுடன் மாநில சுகாதார துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவுடக்கோரி திமுக சரவணன் தரப்பில் சுபீனா என்ற மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த முழு விவரங்கள் சுகாதார துறை செயலாளருக்கு தெரியும் என்பதால், கைரேகையை சான்றளிக்க மருத்துவர் பாலாஜி நியமிக்கப்பட்டது, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்தது, அவர்கள் அளித்த பேட்டிகள் ஆகிய விவரங்கள் அடங்கிய அவணங்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களை அனுமதித்த தேர்தல் ஆணையத்திடமும் விளக்கம் பெறவும் கோரிக்கை வைத்திருந்தார்.
அதில் கைரேகை வைத்தது உண்மைத்தானா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் அக்.6-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.