தமிழகம்

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் ஊழியருக்கு கொலை மிரட்டல் - இமக நிர்வாகி உள்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உள்பட 3 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

திருநாகேஸ்வரம், மணல்மேடு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ஹரி (30). இந்து மக்கள் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞர் அணித் தலைவராக உள்ள இவர் இன்று திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதர் சுவாமி கோயில் அலுவலகத்துக்கு தனது நண்பர்களான, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (32), விஸ்வநாதன் (28), ஆகியோருடன் சென்று அங்குள்ள ஊழியர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் தா.உமாதேவி திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT