சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படைஅதிகாரியாக ரியர் அட்மிரல் ரவி குமார் திங்ரா பொறுப்பேற்றுள்ளார் கடந்த 1992-ல் இந்திய கடற் படையில் பணியில் சேர்ந்தார்.
பல்வேறு கடற்படை போர் கப்பல்கள் மற்றும்நீர்மூழ்கி கப்பல்களில் பணியாற்றியவர். கடற்படை தலைமை அலுவலகத்தில், நீர்மூழ்கி கப்பல்கள் இயக்கப் பிரிவின் முதன்மை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ளதேசிய ராணுவ அகாடமி, வெலிங்டன் ராணுவ கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். பாதுகாப்புத் துறை பத்திரிகை அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.