கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ள பாப்பி மலர்கள். 
தமிழகம்

கொடைக்கானலில் மே மாதம் தொடங்கும் கோடை விழாவில் 60-வது மலர் கண்காட்சி

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே மாதம் தொடங்கும் கோடை விழாவில் 60-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக தோட்டக்கலைத் துறை சார்பில், பிரையன்ட் பூங்காவில் கடந்த நவம்பர் முதல் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

இதில், பல்வேறு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட 15 வகையான, மொத்தம் ஒரு லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

தற்போது, அந்த மலர் செடிகள் ஒவ்வொன்றாக பூக்கத் தொடங்கியுள்ளன. அதில், மஞ்சள் நிறத்தில் பாப்பி, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பேன்ஸி, ஊதா, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் ஸ்டார் பிளக்ஸ் ஆகிய மலர் செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.

SCROLL FOR NEXT