தமிழகம்

பூம்பாறை - குண்டுப்பட்டி சாலை சீரமைக்கப்படுமா? - மலைக்கிராம மக்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறை - குண்டுப்பட்டி சாலையை உட னடியாக சீரமைக்க வேண்டும் என்று மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு, கேரட், உருளைக் கிழங்கு விவசாயம் அதிக அளவில் நடை பெறுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநி லங்களுக்கும் விளை பொருட்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேல்மலையில் குண்டுப்பட்டி, பழம்புத்தூர், புது புத்தூர் உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக பூம்பாறை - குண்டுப்பட்டி சாலை உள்ளது. மொத்தம் 10 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. அதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

மலைக்கிராம மக்கள் இந்த சாலை வழியாக விளை பொருட்களை சரியான நேரத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வந்து செல்வ திலும் சிரமம் உள்ளது. பூம்பாறை - குண்டுப்பட்டி சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் அந்த இடத்தை கடந்த செல்ல வாகன ஓட்டுநர்கள் மிகவும் சிரமப் படுகின்றனர்.

தரைப்பாலப் பணியை விரை வில் முடிப்பதோடு, சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

SCROLL FOR NEXT