தமிழகம்

சென்னையில் கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றியவர் கைது

செய்திப்பிரிவு

கணவனை இழந்த பெண்ணை ஏமாற்றியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுமதி (26). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். மகேஷ் கடந்த 2009-ம் ஆண்டு இறந்துவிட்டார். திருமணத்துக்கு முன்பு சுமதி கொடுங்கையூரை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் ஆலன் கிறிஸ்துதாஸ்(30) என்பவரை காதலித்திருக்கிறார். கணவர் இறந்தது பின்னர் அவருடன் சுமதிக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சுமதி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது 8 வயது மகளிடம் கிறிஸ்துதாஸ் தவறாக நடந்ததாகவும், அதை சுமதி கடுமையாக கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த கிறிஸ்துதாஸ், சுமதியை அடித்து உதைத்துவிட்டு, ‘உனது ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன்’ என்று கூறி மிரட்டியதாகவும், சுமதியிடம் இருந்து ரூ.1 லட்சம் பணம், 10 சவரன் நகைகளையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸில் சுமதி புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி ஆலன் கிறிஸ்துதாஸை வியாழக்கிழமை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT