கோப்புப்படம் 
தமிழகம்

கோரிக்கைகள் ஏற்கப்படாததால் முதல்வர் உரை புறக்கணிப்பு - பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் நேற்று பதிலுரையைத் தொடங்கியபோது, அதைப் புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் பதிலுரையில் 35ஆண்டுகளில் இல்லாத ஜனநாயகத்தை சட்டப்பேரவை நிலைநாட்டி இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் 35 ஆண்டுகளாக இருந்தஜனநாயகத்தை இப்போதைய பேரவைத் தலைவர் நிலைநாட்டவில்லை.

பேரவைத் தலைவரிடம், தேர்தல் ஆணைய உத்தரவு, எங்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகள், சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை ஆகியவை அடிப்படையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி வழங்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு பொதுக் கணக்கு குழு தலைவர் பதவி வழங்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உரையை நேரலைசெய்ய வேண்டும் என 3 கோரிக்கைகளை பேரவைத் தலைவரிடம் வைத்தோம். ஆனால் நிறைவேற்றவில்லை. அதனால் முதல்வர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கோடநாடு வழக்கை வைத்து அரசியல் செய்வதற்காக, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின்முயற்சி செய்கிறார் என்பதால்,இந்த வழக்கை சிபிஐ-க்குமாற்ற வேண்டும் என்று பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்திஉள்ளார். எங்களை அழிக்க திமுக அரசு முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நடக்காது’’ என்றார்.

பேரவைத் தலைவர் வருத்தம்: அதிமுக வெளிநடப்பு குறித்து பேரவைத் தலைவர் அப்பாவு பேரவையில் கூறும்போது, ‘‘சிறப்பாக நடைபெறும் அவை நிகழ்வுகளுக்கு இடையே வேண்டுமென்றே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதல்வரின் பதிலுரையைக் கேட்காமல் இந்த அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதை மக்கள்ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உட்படஉறுப்பினர்கள் இன்று அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது மிக்க வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT