தமிழகம்

வளைகுடா நாடுகளைப் பின்பற்றி ஒருநாள் முன்னதாகவே குமரியில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: வளைகுடா நாடுகளைப் பின்பற்றி குமரி மாவட்டத்தில் இளங்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒருநாள் முன்னதாகவே நேற்று ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

பல்வேறு நாடுகளில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. எனினும், குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பல்வேறு இடங்களில் முஸ்லிம்களில் ஒரு தரப்பினர் வளைகுடா நாடுகளைப் பின்பற்றி ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம்.

அதன்படி, வளைகுடா நாடுகளில் முன்னதாகவே பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், இளங்கடை மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளிவாசல் பகுதியில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு, ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி, தக்கலை, திருவிதாங்கோடு, குளச்சல், தேங்காய்பட்டினம், குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் நேற்று ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். இதுபோல, கேரள மாநிலத்திலும் பல்வேறு இடங்களில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நேற்று நடைபெற்றது.

SCROLL FOR NEXT