தமிழகம்

மாமல்லபுரம் சிற்ப கல்லூரியில் 22 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன் பேசியதாவது: 20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். நீண்ட காலம் சிறைகளில் வாடும் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். மாமல்லபுரம் அரசினர் சிற்பக் கல்லூரியில் போதுமான பேராசிரியர்கள் இல்லை. சிற்பக்கலை படிப்புகள் மூடப்படுமோ என்று மாணவர்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அவருக்கு தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துபேசும்போது, “மாமல்லபுரம் அரசு சிற்பக் கல்லூரியில் 22 பேராசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்கள் குறித்த விவரம் டிஎன்பிஎஸ்சி-க்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT