தமிழகம்

குபேர லட்சுமியை பல்லக்கில் தூக்கிச் செல்லும் லலிதா ஜுவல்லரி நிறுவனர்; வீடியோ வைரல்: அட்சய திரிதியைக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அட்சய திரிதியையின்போது தங்கம் வாங்கினால், இல்லத்தில் தங்கம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த வைபவத்தை கொண்டாடும் விதமாக செல்வ செழிப்புக்கு உகந்த தெய்வமான குபேர லட்சுமியை வழிபட்டு பல்லக்கில் தூக்கிச் செல்லும் லலிதா ஜுவல்லரி நிறுவனர் கிரண்குமாரின் ஒரு நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

யூடியூபில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மொத்தமாக ஒரு கோடி பார்வையாளர்களை சில நாட்களிலேயே தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து லலிதா ஜுவல்லரி நிறுவனர் கிரண்குமார் கூறும்போது, “வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்துக்கு அதிகபட்ச தங்கம் கொடுப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளோம். அட்சய திரிதியை நிகழ்வில் இதை இன்னும் சிறப்பாக்க ஏப்.24 வரை சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதன்படி தங்க நகைகளுக்கு சேதாரத்தில் ஒரு சதவீதம் குறைவு, வைர நகைகளுக்கு காரட்டில் ரூ.2 ஆயிரம் தள்ளுபடி வழங்குகிறோம். எங்கள் விளம்பர வீடியோ அடைந்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT