தமிழகம்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் கைத்தறி, கைவினை கண்காட்சி

செய்திப்பிரிவு

சென்னை: பல மாநில நெசவாளர்கள், கைவினைஞர்களின் விற்பனை கண்காட்சி, ‘டெசிகலா’ சார்பில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் தொங்கப்பட்டுள்ளது.

நெசவாளர்கள், கைவினைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வரும் 'டெசிகலா' எனும் அமைப்பின் சார்பில், பல்வேறு இடங்களில் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் கைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இதில், கைத்தறி பட்டு, காஞ்சி பட்டு, பெங்களூரு பட்டு, கர்நாடகா, ரா சில்க் துணிகள், மங்களகிரி புடவைகள், உப்படா, காட்வால் ஆடைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

மேலும், பல மாநிலங்களின் பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்கள், பொம்மைகள், பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. வரும் ஏப்.23-ம் தேதிவரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்குகாலை 10:30 மணி முதல் இரவு8:30 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு - 9884446747 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT