சென்னை: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன், பொதுச் செயலாளர் வி.நித்தியானந்தன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை குறைக்கவலியுறுத்தி ஏப்.20 (இன்று) தமிழகத்தில் கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர்கள், எம்எஸ்எம்இ செயலாளர், சிட்கோநிர்வாக இயக்குநர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தில் இருந்து நாங்கள் பயன்படும் வகையில் சில மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை ஏற்று, நாளை (இன்று) நடத்த இருந்த ஒருநாள் கதவடைப்பை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.