சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தவுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக நாளை ராமநாதபுரம் செல்கிறார். இதன்படி நாளை காலை 11 மணி முதல் 12.30 மணி வரை ராமேஸ்வரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். 12.30 மணி முதல் 1 மணி வரை ராமேஸ்வரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து மாலை 4.40 மணி முதல் 5.30 மணி முதல் தேவிபட்டினம், நவக்கிரக கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து 5.30 மணி முதல் 6 மணி வரை மீனவர்களுடன் கலந்துரையாடுகிறார். 19-ம் தேதி காலை உத்தரகோசமங்கை கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து மாலை, பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திலும், கமுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளார்.