ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது.
இதில், பங்கேற்ற விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குப் பணம் கை மாறி உள்ளது. இவ்விவகாரத்தில் அண்ணாமலையைத் தமிழக அரசு கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள உத்தரவுக்கு எதிராக மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, பேரணியை நடத்த விடாமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.