தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.கே.கவுல் பதவியேற்றார்

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் (55) இன்று பதவியேற்றார்.

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல்(55) இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக பதவியேற்ற கவுல், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநில நீதிமன்ற ங்களின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்து, தலைமை நீதிபதி பணியிடம் கடந்த 5 மாதங்களாக காலியாக இருந்து வந்தது.

முன்னதாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுலை நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அடங்கிய நீதிபதிகள் குழு முடிவு செய்ததை அடுத்து, இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார்.

SCROLL FOR NEXT