தமிழகம்

அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும்: தினகரன்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும் என அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் நேற்று அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், செய்தியாளர்களிடம் கூறியது: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல், உண்மையா? இல்லையா? என்பது குறித்து அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மக்களவைத் தேர்தல் குறித்து நிகழாண்டு இறுதியில் முடிவு எடுக்கப்படும். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாநாட்டுக்கு என்னை அழைப்பார்களா? என்று எனக்குத் தெரியாது என்றார். அப்போது, கட்சியின் துணைப் பொதுச் செயலர் எம்.ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT