ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் ஊராட்சி அலுவலகம் அருகே பேருந்து நிலையம் உள்ளது. செட்டியார்பட்டி பேரூராட்சி மற்றும் தளவாய்புரம் ஊராட்சிக்கு பொதுவானதாக இந்தப் பேருந்து நிலையம் உள்ளது. இதன் அருகே செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகம், ஊராட்சி வணிக வளாகம், வங்கி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி கடந்த 2021-ம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. அதன்பின் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் குடிநீர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் உள்ள தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.