அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2130 உறுப்பினர்கள் அதாவது பொதுக்குழுவின் 98% உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக இன்று (செப்.12) காலை 10.30 மணியளவில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு கட்சியில் இனி பொதுச் செயலாளர் பதவியே இல்லை என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தினகரன் தரப்பின் பலத்த எதிர்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.