கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள். 
தமிழகம்

கோவையில் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

கோவை: தகவல்களை முறையாக வழங்காதது, தகவல் ஆணையர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்டவற்றை கண்டித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபால் தலைமை வகித்தார். தியாகராஜன், ஹக்கீம், அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு அளிப்பவர்களுக்கு சட்டப்படியான தகவல்களை வழங்கவும், கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்பவும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்டிஐ ஆர்வலர்கள் செல்வம், பழனிச்சாமி, பானு, சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT