தமிழகம்

5 ஆண்டு பி.ஏ.,பி.எல். கவுன்சலிங் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ.,பி.எல். படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. ரேங்க் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்குகிறார்.

காலை 10 மணிக்கு நடைபெறும் கவுன்சலிங் தொடக்க நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.வணங்காமுடி, சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தலைவர் டி.கோபால் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

இன்று தொடங்கும் கவுன்சலிங் ஜூலை 10-ம் தேதி முடிவடைகிறது. முதல் நாளில் பொதுப் பிரிவு மாணவர்களுக்கும், 8-ம் தேதி எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கும், 9-ம் தேதி எம்.பி.சி. மாணவர்களுக்கும் கடைசி நாளில் பி.சி. மாணவர்களுக்கும் கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT