தமிழகம்

சமய நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் - அரசியல் கட்சித் தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: ஈஸ்டர் திருநாளையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பிறருக்கு துன்பங்கள் இழைத்திடாமல் வாழ்ந்து எப்போதும் பிறரது துயரங்களைக் களைந்திட முயற்சி செய்திட வேண்டும் என்ற இயேசுவின் உயரிய போதனைகளை அனைவரும் பின்பற்றவேண்டும். கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் நல்வாழ்த் துகள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இயேசு போதித்த அன்பை மாறாமல் பின்பற்றுகிற கிறிஸ்தவ சகோதரர்களை மனம் திறந்து பாராட்ட விரும்புகிறேன். அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரான அச்சுறுத்தல் தலைதூக்கி வரும் நிலையில், இயேசுவின் அமுத மொழிகளைநினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, மறைக்கப்பட்ட பாட்டாளி மக்களின் சமூக நீதி மீண்டும் ஒளிர வேண்டும். அவற்றுக்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அதை உறுதி செய்ய இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளில் உறுதியேற்றுக் கொள் வோம்.

விசிக தலைவர் திருமாவளவன்: வெகுமக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தையும், இதரவிளிம்புநிலை மக்களுக்கு எதிரான சனாதன பயங்கரவாதத்தை யும் வீழ்த்திட உறுதியேற்போம் என ஈஸ்டர் நன்னாளில் அறைகூவல் விடுத்து, அனைவருக்கும் ஈஸ்டர்நாள் வாழ்த்துகளைத் தெரிவிக் கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஈஸ்டர் திருநாள்அனைவருக்கும் புது நம்பிக்கையையும், மிகுந்த மகிழ்ச்சியையும் கொண்டுவந்து சேர்க்கட்டும். அது, எந்நாளும் தழைக்கட்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி, சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சட்டப்பேரவை முன்னாள்உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்டோரும் ஈஸ்டர் திருநாள்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT