தமிழகம்

தமிழகத்தில் புதிதாக 329 பேருக்கு கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 329 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 188, பெண்கள் 141 என மொத்தம் 329 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 108 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 32 பேருக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், விமானம் மூலம் மலேசியா மற்றும் லண்டனில் இருந்து வந்த தலா ஒருவர் என 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 98,649 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 58,896 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 156 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர்.

தமிழகம் முழுவதும் 1703 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,050 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9,071 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT