தமிழகம்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை திட்டம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம், தாடிக்கொம்பு பேரூராட்சிகளில் நபார்டு திட்டம் மூலம், உலகம்பட்டி முதல் அச்சம்பட்டி வரை ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் புதிய நியாயவிலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை பகுதி மக்களுக்கு, வைகை அணையிலிருந்து பாது காக்கப்பட்ட குடிநீர் கொண்டுவரும் திட்டம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

அகரம், தாடிக்கொம்பு, ரெட்டி யார்சத்திரம் பகுதிகளுக்கு, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.350 கோடியில் விரைவில் தொடங்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிக்கப்படும்.

காவிரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் ஆய்வில் உள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிக வேலை நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயப் பணிகள் அதிகம் உள்ள காலங்களை கணக்கிட்டு, விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில், 100 நாள்வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில், அகரம் பேரூ ராட்சித் தலைவர் நந்தகோபால், தாடிக்கொம்பு பேரூராட்சித் தலைவர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT