கோப்புப் படம் 
தமிழகம்

பொதுப்பணித் துறையில் ஒவ்வொரு பணியின் தரமும் சோதிக்கப்படும்: அமைச்சர் ஏ.வ.வேலு

என். சன்னாசி

மதுரை: நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையில் ஒவ்வொரு புதிய கட்டுமான பணியும் தரம் பரிசோதிக்கப்படும் என அத்துறையின் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று மதுரை வந்தார். விமானம் மூலம் சென்னைக்கு சென்றபோது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "தமிழ்நாடு அரசு நேர்மையான லஞ்சம், லாவண்யம் இன்றி செயல்படவேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்புகிறார். அதில் உறுதியாகவும் இருக்கிறார். நெடுஞ்சாலை, பொதுப் பணித்துறை மூலம் நடக்கும் அனைத்து புதிய பணிகளும் தரம் பரிசோதிக்கப்படுகிறது. குறைபாடு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பணியும் உரிய திட்ட மதிப்பீட்டில் தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்கிறோம்.

கடந்த சில தினத்திற்கு முன்பு குளத்தில் மூழ்கி உயிரிழந்த அர்ச்சர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியை அரசு வழங்கவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். அர்ச்சர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதல்வர் தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அரசு ஒரு அளவுகோல் வைத்துள்ளது. அதன்படியே பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க முடியும்.சம்பவத்தை பொறுத்து முதல்வர் அதற்கான நிதியுதவியை முதல்வர் அறிவிக்கிறார்” என்றார்.

SCROLL FOR NEXT