தமிழகம்

சென்னை கட்டமைப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் - ட்விட்டரில் பிரதமர் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனைய கட்டிடம், சென்னையின் உட்கட்டமைப்பு வசதிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்று சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பதிவில், ”சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைந்துள்ள அதிநவீன ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்” என தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “இது சென்னையின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும். இது இணைப்பு சேவை வசதிகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும், உள்ளூர் பொருளாதாரத்துக்கும் பயனுள்ளதாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT