கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் சுற்றித்திரியும் யானைகள். 
தமிழகம்

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் யானை நடமாட்டம் - சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை

செய்திப்பிரிவு

கொடைக்கானல்: கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில், நேற்று முன்தினம் (ஏப்.5) பிற்பகல் முதல் யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. யானைகளின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், யானைகள் பேரிஜம் ஏரி பகுதியை விட்டு இடம்பெயர்ந்து செல்லாததால், பாதுகாப்பு கருதி நேற்று ஒரு நாள் மட்டும் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்தது. இன்றும் (ஏப்.7) யானைகள் அப்பகுதியிலிருந்து செல்லவில்லையெனில், சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி தரப்படாது என வனத் துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT