மணீஷ் காஷ்யப் 
தமிழகம்

வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் விவகாரம் - தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பிஹார் யூடியூபர் கைது

செய்திப்பிரிவு

மதுரை: வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் தாக்­கப்­ப­டுவ­தாக போலியான வீடியோ எடுத்து வெளியிட்டதாக பிஹார் யூடியூபர் தேசியப் பாதுகாப்புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தமிழ்­நாட்டில் வட­மாநிலத் தொழி­லா­ளர்­கள் கடு­மை­யாக தாக்­கப்­படுகி­ன்றனர். அவர்­களது உயிர்களுக்குப் பாது­காப்பு இல்லை போன்ற தகவல்களுடன் போலியான வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன் சமூக வலைத­ளங்களில் வைரலானது. இந்த போலியான வீடியோ வெளியிட்ட நபர் தொடர்­பாக உரிய விசாரணை நடத்­த காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் அடங்கிய தனிப்­படையினர் பிஹார் சென்று விசாரணை நடத்தி யூடியூபரான மணீஷ் காஷ்­யப் (35) என்­ப­வரை கடந்த வாரம் கைது செய்தனர். அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஏப்.3 வரை காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.

அவரை மீண்டும் காவலில் எடுக்க போலீஸார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால், நீதிபதி அனுமதி மறுத்து ஏப்.19 வரை மணீஷ் காஷ்யப்பை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே, யூடியூப்பர் மணீஷ்காஷ்­யப் தேசியப் பாது­காப்புச் சட்­டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மதுரை எஸ்.பி. சிவபிர­சாத் நேற்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT