சென்னை: தேசிய கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா சென்னை பாந்தியன் சாலையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி திடலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநி திஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:
தேசிய வடிவமைப்பு நிறுவனம்மற்றும் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து கொடுத்த 500 வடிவமைப்புகளின் அடிப்படையில் உருவான பட்டு, காட்டன்சேலைகள் இங்கு விற்பனைக்குவைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியது. தமிழகம் முழுவதும் உள்ள 1,200 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொருட்களை கொள்முதல் செய்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் ரூ.200 கோடியே 92 லட்சம் அளவுக்கு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை செய்து சாதனைபடைத்துள்ளது. கடந்த ஆட்சியின்போது ரூ.7 கோடி நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனம் இன்றைக்கு ரூ.9 கோடியே 46 லட்சம் லாபத்தில் இயங்குகிறது.
நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் கைத்தறிஆடைகளை அதிக அளவில் வாங்கி,பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட ஒத்துழைக்கவேண்டும் என்று அவர் கூறினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன், தேசிய கண்காட்சி விற்பனை தொடங்கி, ஏப்.18-ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல்இரவு 8.30 மணி வரை நடைபெறும்.