தமிழகம்

நீதி, சிறைத் துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் - மும்பை அறக்கட்டளை ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: நீதி - சிறைத்துறை செயல்பாட்டில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மும்பை தனியார் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் அறக்கட்டளை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு 'இந்திய நீதி அறிக்கை' வெளியிடப்படுகிறது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டுக்கான அறிக்கை டெல்லியில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து தமிழக சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தனியார் அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையின்படி, ஒட்டுமொத்தமாக நாட்டிலேயே முதல் இடத்தை கர்நாடகம் பிடித்துள்ளது. 2-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தெலங்கானா, குஜராத், ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா, உத்தராகண்ட், ராஜஸ்தான், பிஹார், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

சிறிய மாநிலங்களை பொறுத்தவரை நாட்டிலேயே முதல் மாநிலமாக சிக்கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனித்தனியாக காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில், சிறை மற்றும் நீதித்துறையில் நாட்டிலேயே சிறந்தமாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடுதான் முதலிடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT