தமிழகம்

ஏரி பாதுகாப்பு ஆணையம் அமைக்கவேண்டும்: மார்க்சிஸ்ட் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஏரி பாதுகாப்பு ஆணையம் அமைக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரகள் கோரிக்கை விடுத்தனர்.

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை நடைபெற்ற பொதுப்பணித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் விவரம்: தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் தூர்ந்து போயுள்ளன. அவற்றை ஆழப்படுத்தி, கரைகளைப் பலப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அதிக அளவு நீரைத் தேக்கி வைக்கமுடியும்.

சென்னை புழல் ஏரியில் வண்டல், குப்பை அதிக அளவில் சேர்ந்துள்ளது. அதை அகற்ற வேண்டும். சென்னை ரெட்டேரியை ஆழப்படுத்த வேண் டும்.

தமிழகத்தில் உள்ள ஏரிகளை பாதுகாத்து நீராதாரத்தை பெருக் குவதற்கு, ஏரி பாதுகாப்பு ஆணை யத்தை அமைக்க வேண்டும். மதுரையில் வைகையாற்றில் 67 இடங்களில் மாநகராட்சியே கழிவுநீரை திறந்துவிடுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

ஜான்ஜேக்கப்: குமரியில் பல இடங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது

SCROLL FOR NEXT