சென்னை: சென்னை ராணுவ பொறியியல் சேவை (எம்இஎஸ்) பிரிவின்கூடுதல் இயக்குநர் ஜெனரலாக(திட்டம்) விபின்குமார் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கெனவே, இப்பதவியை வகித்து வந்த சுனில் அகர்வால்கடந்த மார்ச் 31-ம் தேதியுடன்பணியில் இருந்து ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, விபின் குமார் அகர்வால் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன் புனேயில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.
தென் பிராந்திய ராணுவத்தில் பொறியியல் சேவைபிரிவு உட்பட டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு நிறுவனம், இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு கடற்கரை பகுதி ஆகியவற்றின் பொறியியல் பிரிவையும் இவர் கூடுதலாக கவனிப்பார்.
விபின் குமார் 1984-ம்ஆண்டு இந்திய பொறியியல் சேவை பிரிவைச் சேர்ந்தவர். பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் இத்தகவல் தெரிவித்துள்ளது.