தமிழகம்

சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு கட்டண ரயில்

செய்திப்பிரிவு

சென்னை: விஷூ பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக சென்னை-கண்ணூர் இடையே சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்.13-ம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06047) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கண்ணூர் சந்திப்பை சென்றடையும்.

மறுமார்க்கமாக, கண்ணூரில் இருந்து ஏப்.14-ம் தேதி காலை 8.35 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06048) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்தரயில் அரக்கோணம், காட்பாடி,ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.இந்த சிறப்புக் கட்டண ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்றுகாலை தொடங்குகிறது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT