சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 5 புதிய நிலக்கரி சுரங்கங்களும், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கமும் அமைப்பதற்கான தொடக்க கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "இது தொடர்பாக மக்கள் பீதி அடைய வேண்டாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தக் கூடாது என்ற சட்டம் உள்ளது.
எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண் சார்ந்த பணிகள் தான் மேற்கொள்ளப்படும், வேறு எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படாது என்று முதல்வர் உறுதி அளித்து உள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சுரங்கம் போன்ற பணிகளை தொடங்க அனுமதி இல்லை" என்று கூறினார்.