தமிழகம்

வீட்டுவசதி வாரியத்தில் விற்பனையாகாத 8,822 வீடு, மனைகள்

செய்திப்பிரிவு

ஈரோடு: தமிழக வீட்டுவசதி வாரியத்தில், 8,822 வீடுகள் மற்றும் மனைகள் விற்பனையாகாமல் உள்ளதாக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில் வீட்டுவசதி வாரிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். வீட்டுவசதி வாரியத்தால் கடந்த காலங்களில் கட்டப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட 8,822 வீடுகள் மற்றும் மனைகள் விற்பனையாகாமல் உள்ளன.

எனவே, பொதுமக்களின் தேவையை மதிப்பீடு செய்த பிறகே, புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்படும். தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ள மண்டலங்களில் தொழிலாளர்களுக்குத் தேவையான வீடுகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு வீட்டுவசதி வாரியம் வீடுகளைக் கட்டித் தரும்.

சென்னைக்கு அருகே துணைக்கோள் நகரம் அமைக்க பொருத்தமான நிலங்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நகலை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சு.முத்து சாமி கூறினார்.

SCROLL FOR NEXT