உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

 
தமிழகம்

அரசு கல்லூரிகளில் விளையாட்டு மேம்பாடு: அமைச்சர் விஸ்வநாதன் ஆலோசனை

ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: அரசு கல்லூரிகளில் விளையாட்டு மேம்பாட்டு செயல்பாடுகள் தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் உடற்கல்வி இயக்குநர்களின் கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நாளை( வெள்ளி) பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. 

இதுதொடர்பாக அரசு கல்லூரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் சோ.சுரேஷ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 188 அரசு கல்லூரிகளில் 97 கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு கல்லூரிகளின் விளையாட்டு மேம்பாட்டுக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

மேலும் அரசு கல்லூரிகளில் விளையாட்டுகளில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு தனி பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். பயிற்சிபெறும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டும். பிற கல்லூரிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கும், விளையாட்டு விழா, விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும், தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாக்குவதற்கும் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசு கல்லூரிகளின் விளையாட்டு மேம்பாட்டுக்கென அரசு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்தால், அரசு கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உயர்கல்வி அமைச்சர் ஆலோசனை: இதற்கிடையே, அரசு கல்லூரிகளில் விளையாட்டு மேம்பாட்டு செயல்பாடுகள் தொடர்பாக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் உடற்கல்வி இயக்குநர்களின் கூட்டம் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நாளை( வெள்ளி) பிற்பகல் 2 மணியளவில் நடைபெறுகிறது. இதில் உயர் கல்வித்துறை செயலர் தீரஜ்குமார், கல்லூரி கல்வி ஆணையர் பா.பொன்னை மற்றும் மண்டல இணை இயக்குநர்கள் கலந்து கொள்கிறன்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT