சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் வியாபாரி ஒருவரை கஞ்சா போதையில் திமுகவினர் கத்தியால் குத்திக் கொலை செய்தசம்பவத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். போதை கலாச்சாரத்தை ஒழிக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமேசட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும்.
உயிரிழந்த இப்ராஹிம் குடும்பத்துக்குஅரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.