தமிழகம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை முன்னேற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவைஉறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன்(74). இவருக்கு கடந்த 15-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், இருமல் ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, லேசானகரோனா பாதிப்பும் இருப்பது தெரிந்தது.பின்னர், சில நாட்களில் கரோனா பாதிப்பிலிருந்து அவர் குணமடைந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், `விரைவில் வீடு திரும்புவேன்' என ஈவிகேஎஸ் இளங்கோவனும் வீடியோ வெளியிட்டார். ஆனாலும், இதய பாதிப்பு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவமயைில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுதாகர் சிங் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இதய பாதிப்பு மற்றும் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட இளங்கோவன்,மார்ச் 15-ம் தேதி முதல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர், கரோனா பாதிப்பு மற்றும் இதய பாதிப்புகளிலிருந்து நலமடைந்து தேறிவருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT