தமிழகம்

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்வு செயயப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி நேற்று பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT