வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோட்டில் இருந்து காங்கிரஸ் வாகனப் பேரணியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 
தமிழகம்

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ஈரோட்டில் இருந்து காங்கிரஸார் வாகன பேரணி

செய்திப்பிரிவு

ஈரோடு: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா நினைவாக, தந்தை பெரியாரின் நினைவிடத்துக்கும், ஈரோட்டுக்கும் வந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தி விட்டு, வைக்கம் நிகழ்வுகளை நடத்துவது என கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, கேரள காங்கிரஸ் குழுவினர் நேற்று ஈரோடு வந்தனர்.

நாளை (மார்ச் 30) வைக்கத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவையொட்டி ஈரோட்டில் இருந்து வாகனப்பேரணி நேற்று புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அமைச்சர் முத்துசாமி, காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மோகன்குமாரமங்கலம், கேரள முன்னாள் எம்எல்ஏ பலராமன், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், கவுன்சிலர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT